TALENT HUNT ONLINE EVENT
SEASON 02 - 2020

ABOUT TALENT HUNT ONLINE EVENT | SEASON 02 - 2020

இதுவரை உலகம் கண்டிராத அற்புதமான நிகழ்ச்சி தான் திறமைகளுக்கான தேடல் TALENT HUNT ONLINE EVENT SEASON 02.இது இணையம் மூலம் இடைவிடாது தொடர்ச்சியாக நடைபெறும்.தனிமனிதனின் திறமையை உலகுக்கு அடையாளம் காட்டும் அதிசியம் தான் இந்நிகழ்ச்சி. உலகம் முழுவதும் உள்ள அனைவரும் பங்கேற்கலாம் என்பதை பெருமையுடன் தெரிவிப்பதில் இராபா மீடியா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.தனிமனித சிந்தனை மற்றும் திறன் வெளிபாட்டில் கின்னஸ் சாதனை புரிந்த இராபா மீடியா நிறுவனத்தின் கனவு நிகழ்ச்சிதான் TALENT HUNT ONLINE EVENT SEASON 02.
என்பது புகழ்பெற்ற வாசகம் மட்டுமல்ல. மறுக்கமுடியாத உண்மையும்.மந்திர சக்தி வாய்ந்த சொற்கள் கூட.தன்னலமற்ற எங்களது சேவை உங்களை பலப்படுத்துவது மட்டுமல்ல,உங்களை உலகத்துக்கு அடையாளமும் காட்டும் என்பதை பெருமையுடன் அறிவிப்பது கனவுகளின் சரணாலயம் இராபா மீடியா.
கின்னஸ் உட்பட 8 க்கும் மேற்பட்ட உலக சாதனைகளை குறுகிய காலத்தில் நிகழ்த்தி, 50 க்கும் மேலான ஆடிசன் நிகழ்ச்சிகள் என தனிமனித திறமையை உலகுக்கு அடையாளம் காட்டி மாபெரும் சாதனை புரிந்த இராபா மீடியாவின் தன்னலமற்ற தொண்டுக்கு மற்றொரு மைல்கல்லாக டேலண்ட் ஹன்ட் சீசன் 1 நிகழ்ச்சி அமைந்துள்ளது என்பது பெருமைப்பட தக்கதாக உள்ளது.
எங்கள் உலக சாதனை நிகழ்ச்சிகள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று உலகையே வியப்பில் ஆழ்த்தியது அது மட்டுமல்ல எங்கள் நிகழ்ச்சிகள் கல்வி கூடங்களில் மட்டுமே நிகழ்ந்தது என்பது எங்களின் மற்றொரு பெருமையாகும்.
சாதனை நிகழ்ச்சிகளை யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிகழ்த்த முடியும். ஆனால் கல்விக்கூடங்களில் சாதனை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவது என்பது அந்த நிறுவனத்தின் தனித்தன்மையையும், மேம்பாட்டையும் உணர்த்தும். இராபா மீடியா நடத்திய அனைத்து உலக சாதனைகளும் கல்விக் கூடங்களில் மட்டுமே நிகழ்ந்தது என்பது இந்த நிறுவனத்தின் தனித் தன்மையை உணர்த்தும். இத்தகைய பெருமை வாய்ந்த நிறுவனத்தின் மற்றொரு நிகழ்ச்சி தான் டேலண்ட் ஹன்ட் சீசன் 2.
டேலண்ட்அன்ட் ஆன்லைன் சீசன் 1 மூன்று சுற்றுகளாக நடைபெற்று மாபெரும் வெற்றி தடயத்தை இவ்வுலகில் பதித்து இராபா மீடியாவின் கொள்கையான தனிமனித திறமையை மேம்படுத்துதல் என்பதை உலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது,இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றி.
இதற்கு முன்னரே பல்வேறு உலக சாதனைகள் மூலம் மக்கள் மனதிலும் கலைஞர்கள்,மாணவர்கள் மனதிலும் நீங்கா இடம்பெற்ற இராபா மீடியா சீசன் 1 ஆன்லைன் போட்டி மூலம் மீண்டும் தன்னுடைய தன்னலமற்ற சேவையை உலகமே இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போதும் நிரூபித்து காட்டியுள்ளது.
டேலண்ட் ஹன்ட் சீசன் 1, முதல் சுற்றில் மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் சான்றிதழும், கேடயமும், பதக்கமும் வழங்கப்பட்டன.
இரண்டாவது சுற்றில் சிறப்புப் பட்டங்களும், பதக்கங்களும், கேடயமும் வழங்கப்பட்டது.
மூன்றாவது சுற்றில் ஒரிஜினல் வெள்ளிப் பதக்கமும், கேடயங்களும், பட்டங்களும் வழங்கப்பட்டு அவர்கள் நேரடியாக வரவழைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது, அனைவர் மனதிலும் இராபா மீடியாவின் பெருமையை நிலைபெற செய்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது, மறக்கவும் முடியாது.
“ எந்த நாட்டில் மேதைகள் மதிக்கப்பட வில்லையோ
அந்த நாட்டில் மீண்டும் அவர்கள் தோன்றுவதில்லை “
பெரும் வரவேற்பைத் தொடர்ந்து TALENT HUNT ONLINE EVENT சீசன் 2 நிகழ்ச்சியை இராபா மீடியா அறிமுகம் செய்துள்ளது. இது 4 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒரே ஒரு போட்டியில் பல்வேறு வாய்ப்புகளை தரும் உலகத்தின் ஒரே நிகழ்ச்சி இதுதான் என்பது மற்றொரு பெருமையாகும். மற்ற நிகழ்ச்சிகளில் போட்டிகளில் ஒருமுறை மட்டுமே பரிசுகளும், விருதுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் TALENT HUNT ONLINE EVENT இதிலிருந்து சற்று மாறுபட்டது. ஒரு முறை கலந்து கொண்ட உங்களுக்கு ஒரு முறை மட்டும் பரிசு வழங்கப் படுவதில்லை உங்கள் திறமைக்கேற்ப நான்கு முறை பரிசு பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறது. ஏற்கனவே நடந்த சீசன் 1 நிகழ்ச்சியில் மூன்று சுற்றுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு பல்வேறு மாணவர்கள் பட்டங்களும், பதக்கங்களும், கேடயங்களும், பரிசுகளும் பெற்று சாதனையாளர்களாக திகழ்ந்தார்கள் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். இந்த போட்டியில் இலவசமாகவும் பங்கேற்கலாம்.
இலவசமாக பங்கேற்பவர்கள் இரண்டு சுற்றுகள் வரை முன்னேற முடியும். இப்போட்டியில் தங்க நாணயங்கள் மற்றும் பதக்கங்கள், பணப் பரிசுகள், வெள்ளி பதக்கங்கள், சிறப்புப் பட்டங்கள், வெளிநாட்டில் நடைபெறக்கூடிய திறமை சார்ந்த போட்டிகளில் சார்ந்த பங்கேற்கும் வாய்ப்பு, உலக அளவிலான விருதுகள் மற்றும் பல்வேறு விதமான வாய்ப்புகள் என உலகில் யாரும் நிகழ்த்த முடியாத சாதனையாக மாறப்போகிறது இந்த நிகழ்ச்சி, என்பதை அறிவிப்பதில் இராபா மீடியா பெருமை கொள்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீடியோவை உங்களது கைப்பேசி மூலமோ அல்லது புகைப்பட கருவி மூலமோ எடுத்து குறைந்தபட்சம் மூன்று நிமிடம் அதிகபட்சம் 10 நிமிடம் எடுத்து 96 00 11 27 14 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமோ அல்லது என்ற மின்னஞ்சலுக்கு, மின்னஞ்சல் ஆகவோ அல்லது கூகுள் டிரைவ் லிங்க் மூலமாகவும் அனுப்பலாம்.
உலகம் முழுவதிலிருந்தும் 13 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு துறையை சேர்ந்த கலைஞர்களும், மாணவர்களும் பங்கேற்கக் கூடிய உலக அளவிலான இந்த நிகழ்ச்சியில்,போட்டியில் உங்களுக்கும் வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது மகிழ்ச்சியுடன் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இலவசமாக போட்டியில் கலந்து கொண்டவர்கள் தங்களுடைய பங்கேற்றமை காண சான்றிதழை இ-மெயில் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். அச்சிடப்பட்ட சான்றிதழ் தேவைப்படின் சான்றிதழ் அஞ்சல் செலவினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை ( ஸ்க்ரீன் ஷாட் ) கண்டிப்பாக ஈமெயில் அல்லது வாட்ஸ்அப் ஸ்க்ரீன் ஷாட் மூலமாக அனுப்ப வேண்டும். 24 மணி நேரத்திற்குள் சரிபார்க்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)